பல நாட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த போதை கடத்தல் மன்னன் துருக்கியில் கைது
By: Nagaraj Fri, 03 Nov 2023 6:00:06 PM
துருக்கி: போதை கடத்தல் மன்னன் கைது... அமெரிக்கா உள்பட பல்வேறு நாட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனை துருக்கியில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா உள்பட பல்வேறு நாட்டு போலீசாரால் தேடப்பட்டுவந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனை துருக்கியில் போலீசார் கைது செய்தனர்.
துருக்கியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்த பெற்றோருக்கு பிறந்த ஹக்கன் அயிக்கை போதைப்பொருள் கடத்தல், கொலை, ஹவாலா மோசடி போன்ற பல வழக்குகளில் போலீசார் தேடிவந்தனர்.
2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து தப்பி சென்ற அயிக், துருக்கியில் இருந்தபடி பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திவந்ததாக கூறப்படுகிறது.
உலகளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வந்த ரகசிய சாட் செயலியை ஹேக் செய்த FBI அதிகாரிகள், அயிக்கின் இருப்பிடம் குறித்து துருக்கி போலீசாருக்கு தகவல் அளித்து கைதுக்கு வழிவகுத்தனர்.