Advertisement

WhatsApp செயலியில் அறிமுகப்படுத்தியுள்ள அம்சம்

By: vaithegi Fri, 03 Feb 2023 7:04:28 PM

WhatsApp செயலியில் அறிமுகப்படுத்தியுள்ள அம்சம்

இந்தியா: உலகம் முழுவதும் WhatsApp செயலியை பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த செயலியில் பயனாளிகளின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்கு புதுப்புது அப்டேட்டுகளை இந்த நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், WaBetaInfo ஆனது WhatsApp செயலியில் அறிமுகப்படுத்தியுள்ள அம்சம் பற்றிய அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீங்கள் முக்கியமாக நினைக்கும் உங்களின் மெசேஜை நீங்கள் Chat-ல் Pin செய்து வைத்துக் கொள்ளலாம்.

whatsapp,update ,WhatsApp ,அப்டேட்

இதனால் இந்த மெசேஜை நீங்கள் அடிக்கடி தேடி பார்க்க தேவையில்லை. மேலும் இந்த அம்சத்தை நீங்கள் தனிப்பட்ட நபர் மற்றும் குழுக்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பாக Call Link- என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அதன்படி WhatsApp செயலி மூலமாக தொடர்பு கொள்பவராக இருந்தால், தற்போது எளிமையாக தொடர்பு கொள்ள வசதியாக Call Link-ஐ நீங்கள் உருவாக்கி கொள்ளலாம். இதனால் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களை, ஒவ்வொரு முறையும் செயலியை திறந்து, அந்நபரின் பெயரை தேட வேண்டிய தேவையில்லை.

Tags :