Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயணிகளின் வசதிக்காக 24 விரைவு ரயில்களில் உள்ள ஒரு சில பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம்

பயணிகளின் வசதிக்காக 24 விரைவு ரயில்களில் உள்ள ஒரு சில பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம்

By: vaithegi Wed, 24 Aug 2022 7:46:45 PM

பயணிகளின் வசதிக்காக 24 விரைவு ரயில்களில் உள்ள ஒரு சில பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம்

சென்னை: ரயில் போக்குவரத்தில் பயணிகளின் வசதிக்காக சூடுதல் சேவைகளும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் 24 விரைவு ரயில்களின் சேவைகளை மாற்றம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ரயில்களில் முன்பதிவில்லாமல் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தான் உயர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த முன்பதிவில்லாமல் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக 24 விரைவு ரயில்களின் தடங்களில் ஒரு சில பெட்டிகள் மட்டும் முன்பதிவில்லாமல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

express train,unreserved coach ,விரைவு ரயில் , முன்பதிவில்லாத பெட்டி

அந்தவகையில் சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு – கர்நாடகா மாநிலம் மங்களூர் செல்லும் விரைவு ரயில், எழும்பூரில் இருந்து – கேரளா மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில், எழும்பூரில் இருந்து – ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து – எழும்பூர் செல்லும் விரைவு ரயில், துாத்துக்குடியில் இருந்து – கர்காடகா மாநிலம் மைசூர் செல்லும் விரைவு ரயில்,

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து – நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில்களில் ஒரு சில பெட்டிகள் மட்டும் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :