Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 28 Aug 2023 2:55:15 PM

தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல நாளை தேனி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர் புதுக்கோட்டை, பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain,thanjavur,pudukottai ,கனமழை , தஞ்சாவூர், புதுக்கோட்டை

மேலும் சென்னையைப் பொறுத்தவரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை எட்டும்.

நாளை மற்றும் வருகிற 30 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :