Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய கூடும்

தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய கூடும்

By: vaithegi Wed, 23 Aug 2023 10:23:25 AM

தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய கூடும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.எனவே இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இதனை அடுத்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 24-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rainy,puducherry,tamil nadu ,மழை ,தமிழகம், புதுச்சேரி


தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், சென்னை கலங்கரைவிளக்கத்தில் 4 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 3 செ.மீ., சேலம் மாவட்டம் தலைவாசல், ஈரோடு மாவட்டம் பவானி, செங்கல்பட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவானது .

மேலும் இன்று சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் நிலவுவதோடு, லேசான மழையும் பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.


Tags :
|