Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்

இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 16 Nov 2022 08:39:47 AM

இந்த  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை பரவலாக கொட்டி தீர்த்தது. அதன் பின்காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடந்த வாரம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

இதில் அதிக அளவாக 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை வெளுத்து வாங்கியது. இதற்கிடையே கடந்த சில தினங்களாகவே மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

rain,wind ,மழை ,சீர்காழி

இதனை அடுத்து சென்னையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது. இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், எனவே இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|