Advertisement

இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sun, 08 Oct 2023 3:05:56 PM

இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

சென்னை:இன்றைய வானிலை நிலவரம் .. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கோயம்புத்தூர்‌ மாவட்டத்‌தின்‌ மலைப்பகுதிகள்‌,

மேலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, இருச்சிராப்பள்ளி, கரூர்‌, திண்டுக்கல்‌, மதுரை மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

rain,weather conditions ,மழை ,வானிலை நிலவரம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|