Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புதிய வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் .. மீறினால் ரூ.1000 அபராதம்

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புதிய வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் .. மீறினால் ரூ.1000 அபராதம்

By: vaithegi Thu, 02 Nov 2023 2:15:01 PM

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு புதிய வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் .. மீறினால்  ரூ.1000 அபராதம்

சென்னை: வருகிற நவ.4 முதல் அமல் .. சென்னையில் மட்டுமே நாளொன்றுக்கு 62.5 லட்ச வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதற்கு இடையே, மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டட பணிகள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே இதனை, ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேக கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, சென்ட்ரல், டாக்டா் குருசாமி பாலம், புல்லா அவென்யு, அண்ணா சாலை, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் ஸ்பீடு ரேடாா் கன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

regulations,new speed limit,fines ,விதிமுறைகள் , புதிய வேக கட்டுப்பாட்டு ,அபராதம்


இதையடுத்து இந்த வேகத்தடைகளில் காா், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்லலாம் எனவும், பேருந்து, லாரி, டிரக்குகள் போன்ற கனரக வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும், ஆட்டோ 40 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் 30 கி.மீ. வேகத்துக்குள்ளும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் நவ.4 முதல் அமலில் இருக்கும் என்றும், விதிமுறை மீறப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :