Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க காலக்கெடு நிறைவு ...இனி ரூ.1000 அபராதம்

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க காலக்கெடு நிறைவு ...இனி ரூ.1000 அபராதம்

By: vaithegi Sat, 02 July 2022 3:53:47 PM

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க காலக்கெடு நிறைவு ...இனி ரூ.1000 அபராதம்

இந்தியா: ஆன்லைன் மூலமான மோசடிகளை தடுக்க கட்டாயமாக பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும். வங்கி மற்றும் புதிய ஆவணங்களை உருவாக்குவதற்கு கூட பான் கார்டுடன் இணைக்கப்பட்ட ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இதனால் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க அவ்வப்போது அரசு வலியுறுத்தி வருகிறது.

மேலும், பான் கார்டுடன் ஆதாரை இணைக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31 தான் கடைசி நாள் என காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

இதன் பின், தாமதக் கட்டணம் ரூ.500 செலுத்தி ஜூன் 30 ஆம் தேதி வரைக்கும் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைத்து கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. பான் ஆதாருடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி முடிந்துவிட்டது. நேற்றில் இருந்து பான் ஆதாருடன் ஆதார் கார்டை இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

completion of time limit,penalty ,காலக்கெடு நிறைவு ,அபராதம்

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க முதலில், வருமான வரித் துறை இணையதள முகவரியான https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்கிற பக்கத்திற்கு சென்று அதில் உள்ள CHALLAN NO./ITNS 280 என்கிற பகுதியை கிளிக் செய்யவும். Tax Applicable பகுதியில் உள்ள Income Tax என்கிற பகுதியை கிளிக் செய்யவும். அடுத்து, Type of Payment என்பதில் (500) Other Receipts என்பதை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவு செய்யவும்.

பின், Permanent Account No பகுதியில் பான் எண்ணை பதிவு செய்து Assessment Year என்பதில் 2023-2024 ஐ தேர்வு செய்யவும். பின்னர் மாவட்டம், மாநிலம், பின்கோடு அனைத்தையும் பதிவு செய்து கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும். பின்னர், ரூ.1000 அபராதத்தை செலுத்திவிட்டு அங்கீகரிக்கவும்.

Tags :