Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்தவர்களிடம் ரூ.45.06 கோடி அபராதம் வசூல்

ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்தவர்களிடம் ரூ.45.06 கோடி அபராதம் வசூல்

By: vaithegi Fri, 05 Aug 2022 08:59:42 AM

ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்தவர்களிடம் ரூ.45.06 கோடி அபராதம் வசூல்

மும்பை : மத்திய ரெயில்வேயில் பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையங்கள் மிக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்திகொண்டு வருகின்றனர்.

எனவே இதன் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்த 18 லட்சத்து 37 ஆயிரம் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.126.18 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

penalty,ticketless,travel ,அபராதம் ,டிக்கெட் இல்லாமல்,பயணம்

மேலும் இதில் ஜூலை மாதம் மட்டும் ஓசிப்பயணம் செய்த 3.27 லட்சம் பேரிடம் இருந்து ரூ.20 கோடியே 66 லட்சம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 7½ லட்சம் பேர் பிடிபட்டு, அவர்களிடம் இருந்து ரூ.45.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது.

எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 180 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Tags :