Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்

By: vaithegi Sat, 24 June 2023 6:09:44 PM

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்

இந்தியா: அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

எனவே இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

low pressure area,bay of bengal ,குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,வங்கக்கடல்

இதற்கு இடையே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று 26.06.2023 முதல் 28.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் கோடைக் காலத்தில் வாட்டி வதைத்த வெப்ப அலை முடிவுக்கு வந்து நிலையில், தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 28ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிந்துள்ளது.

Tags :