Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மதியம் முதல் 14 நாட்கள் மணிப்பூர் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமுல்

இன்று மதியம் முதல் 14 நாட்கள் மணிப்பூர் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமுல்

By: Nagaraj Thu, 23 July 2020 3:27:46 PM

இன்று மதியம் முதல் 14 நாட்கள் மணிப்பூர் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமுல்

கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 14 நாட்களுக்கு இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த 630,138 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 15,371,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

manipur,14 days,full curfew,from today,amul ,மணிப்பூர், 14 நாட்கள், முழு ஊரடங்கு, இன்று முதல், அமுல்

இதில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,239,684 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பல்வேறு மாநிலங்களிலும் தினமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அந்த வகையில் மணிப்பூரில் கொரோனா பரவல் தினம் தினம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் எவ்வித பயண வரலாறும் இல்லாத நிலையிலும், சிலருக்கு கொரோனா தொற்று உருவானதை அடுத்து அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மாநிலம் முழுவதும் அமுல்படுத்தப்பட உள்ளது.

இந்நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலானா அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்று மதியம் 2 மணி முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. இதுவரை அங்கு 2060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 642 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :