Advertisement

ரஷ்யாவில் மேலும் 5,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Karunakaran Sun, 16 Aug 2020 12:38:01 PM

ரஷ்யாவில் மேலும் 5,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2,14,94,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7,66,165 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் மேலும் 5,061 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9,17,884 ஆக அதிகரித்துள்ளது.

russia,corona virus,corona death,corona prevalence ,ரஷ்யா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15,617 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 6,447 பேர் குணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் இதுவரை 7,29,411 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா பாதிப்புடைய 1,72,856 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|