காங்கேயம் அருகே, கிணற்றில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி
By: Nagaraj Sun, 09 Apr 2023 4:02:25 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, கிணற்றில் தவறி விழுந்து நான்கு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நஞ்சப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த பிரபாகர் - தனலட்சுமி தம்பதியின் நான்கு வயது மகள் தக்ஷனாஸ்ரீ, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், குழந்தையை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
child |
casualty |
police |