Advertisement

டாட்டா காட்டிய காதலனை நூதனமாக தண்டித்த காதலி

By: Nagaraj Wed, 20 May 2020 8:28:53 PM

டாட்டா காட்டிய காதலனை நூதனமாக தண்டித்த காதலி

தன்னை விட்டு பிரிந்த காதலனை நூதன முறையில் பழிதீர்த்துக் கொண்டுள்ளார் சீன பெண். இதற்காக அவர் பயன்படுத்தியது வெங்காயத்தை.

தன்னை விட்டு பிரிந்த காதலனை பழி வாங்குவதற்காக காதலி ஒருவர் 1000 கிலோ வெங்காயத்தை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் சீனாவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் ஷாண்டோங் பகுதியை சேர்ந்த ஜாவோ என்ற பெண் நீண்ட நாட்களாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலர் தினத்தை அவரோடு சேர்ந்து கொண்டாட ஆவலாக இருந்த ஜாவோவுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அந்த இளைஞர் காதலிக்கு டாட்டா காட்டி விட்டு பிரிந்து விட்டார்.

china,lover,abandoned,girlfriend,onion ,சீனா, காதலன், கைவிட்டார், காதலி, வெங்காயம்

இதனால் மனமுடைந்த ஜாவோ கடந்த சில நாட்களாக மிகுந்த வருத்தத்துடன் அழுதபடி இருந்துள்ளார். ஆனால் அந்த காதலரோ இன்னும் உற்சாகமாக உலா வந்துள்ளார. இதுதெரிந்த ஜாவோ தனது காதலனை நூதனமான முறையில் பழிவாங்க எண்ணியுள்ளார். இதற்காக 1000 கிலோ வெங்காயத்தை தனது காதலனின் முகவரிக்கு ஆர்டர் செய்து அனுப்பினார் ஜாவோ.

வீட்டில் கொண்டு வந்து இறக்கப்பட்ட வெங்காயத்துடன் அந்த இளைஞருக்கு ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் 'நம் காதலுக்காக பல நாட்களாக நான் அழுது விட்டேன். இப்போது உனது முறை' என்று "பஞ்ச்" வைக்கப்பட்டு இருந்தது.

வீட்டில் கிடக்கும் டன் கணக்கான வெங்காயத்தால் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தார் கண்டனமும், புகார் அளித்து வரும் நிலையில் என்ன செய்வதென்று நொந்து போய் உள்ளாராம் அந்த காதலன்.

Tags :
|
|