Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உழைக்கும் மக்கள் மீது சுமைகளை சுமத்தியுள்ள அரசாங்கம்... சஜித் பிரேமதாச விமர்சனம்

உழைக்கும் மக்கள் மீது சுமைகளை சுமத்தியுள்ள அரசாங்கம்... சஜித் பிரேமதாச விமர்சனம்

By: Nagaraj Sat, 01 July 2023 11:28:56 AM

உழைக்கும் மக்கள் மீது சுமைகளை சுமத்தியுள்ள அரசாங்கம்... சஜித் பிரேமதாச விமர்சனம்

கொழும்பு: மக்கள் மீது சுமைகளை சுமத்தியுள்ளது... அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது அனைத்துச் சுமைகளையும் சுமத்தியுள்ளதாகவும் இந்தநேரத்தில் சரியான விடயங்களை சரியான முறையில் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “நாடு இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. உள்நாட்டு கடனை மறுசீரமைக்க மாட்டோம் என்று அரசாங்கம் முன்பு கூறியது என்றாலும் அந்த முடிவு மாற்றப்பட்டு உள்நாட்டு கடனை மறுசீரமைக்க தயாராக உள்ளனர்.

united people power,fraud,corruption,modernity,government,burden ,ஐக்கிய மக்கள் சக்தி, மோசடி, ஊழல், அண்மைக்காலம், அரசாங்கம், சுமை

இதனால் நாளை நாட்டுக்கு மிக முக்கியமான நாட்கள் புத்த பெருமான் போதித்ததைப் போல எது நல்லது எது கெட்டது என்பதை நாம் சரியாக தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முக்கியமான தருணம் எழுந்துள்ளது.

உழைக்கும் மக்கள்,நடுத்தர மக்கள், சாமானியர்களின் சேமலாப நிதியில் கூட இந்த அரசாங்கம் அழுத்தம் செலுத்தி இந்நாட்டு உழைக்கும் மக்கள் மீது அனைத்துச் சுமைகளையும் சுமத்தியுள்ளது.

நாட்டின் வளங்களை அபகரித்து மோசடி மற்றும் ஊழலை அமுல்படுத்தி கொண்டு சென்ற அண்மைக்கால ஆட்சியினால் எமது நாடு தற்போது மிகவும் வறுமை மற்றும் அவல நிலையை அடைந்துள்ளது.

இந்நிலையில் இருந்து நாட்டை மீட்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :
|