Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி கோயிலில் வழிபாடு நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர்

திருப்பதி கோயிலில் வழிபாடு நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர்

By: Nagaraj Thu, 13 July 2023 8:06:52 PM

திருப்பதி கோயிலில் வழிபாடு நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர்

திருப்பதி: இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தனர். ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவப்படும் போதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதிக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள நிலவை ஆராய, 615 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-3 திட்டத்தை ஸ்ரீஹரிகோட்டா அறிவித்துள்ளது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த பணியை முடித்துள்ளனர்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.

isro,scientists,temple,tirupati,worship, ,இஸ்ரோ, கோவில், திருப்பதி, வழிபாடு, விஞ்ஞானிகள்

ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

இதனிடையே இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தனர். ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவப்படும் போதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதிக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.

Tags :
|
|