அமெரிக்காவின் வணிகவளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு
By: Nagaraj Mon, 10 Apr 2023 8:27:14 PM
டெல்வேர்: மர்மநபர் துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவின் டெல்வேரில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று வணிக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஃபுட் கோர்ட்டில் நின்றிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
உடனடியாக மாலில் இருந்த கடைக்காரர்களை போலீசார் வெளியேற்றியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வரும் நிலையில், வணிக வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :
police |
assault |