Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

By: Nagaraj Fri, 28 July 2023 8:33:57 PM

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ரஷ்யா: சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சைபீரியாவின் அல்தாப் குடியரசில் தனியாருக்குச் சொந்தமான எம்ஐ 8 ரக ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

helicopter,crash,casualties,information,fire , ஹெலிகாப்டர், விபத்து, உயிரிழந்துள்ளனர், தகவல்கள், தீப்பிடித்தது

இதில் 12 பயணிகளும், 3 பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஹெலிகாப்டரில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்றவர்கள் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

Tags :
|