Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான பாலம் விரைவில் திறக்கப்படும்

செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான பாலம் விரைவில் திறக்கப்படும்

By: Nagaraj Sun, 26 Mar 2023 6:28:46 PM

செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான பாலம் விரைவில் திறக்கப்படும்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான பாலம் விரைவில் திறக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

உலகின் மிக உயரமான பாலமாக கருதப்படும் செனாப் ரயில் பாலம் பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது. ஈபிள் கோபுரத்தை விட உயரமான இந்த பாலத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது.

அங்குள்ள கவுரி கிராமத்திற்கு அருகில் சலால் அணை அமைந்துள்ளது. அணைக்கு அருகில், இரண்டு மலை முகடுகளுக்கு இடையே ஒரு பெரிய பிரமாண்டமான கட்டமைப்புடன் ‘செனாப் பாலம்’ உருவாக்கப்பட்டுள்ளது. செனாப் ரயில் பாலம் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் உள்ளது.

chenab railway bridge,kashmir,railway bridge,very high, ,காஷ்மீர், செனாப் ரயில் பாலம், மிக உயரம், ரெயில்வே பாலம்

அதாவது ஈபிள் கோபுரத்தின் உயரம் 324 மீட்டர். செனாப் ரயில் பாலம் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, உலகின் மிக உயரமான ரயில் பாலம் சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள பெபன்ஜியாங் ஆற்றின் மீது 275 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. செனாப் ரயில் பாலம் செயல்பாட்டுக்கு வரும்போது, இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலமாக இருக்கும். ‘செனாப் பாலம்’ 359 மீட்டர் உயரமும் 1315 மீட்டர் நீளமும் கொண்டது.

உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் ரூ.28,000 கோடியில் வடக்கு ரயில்வேயால் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஆயுட்காலம் குறைந்தது 120 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கடுமையான நிலநடுக்கங்களை தாங்கும் திறன் கொண்டது. இந்த பாலத்தின் உறுதித்தன்மை சோதனையின் பின்னர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :