Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை

இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை

By: vaithegi Wed, 19 July 2023 3:40:48 PM

இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை

இந்தியா : ஆண்டுதோறும் இஸ்லாமிய மக்களால் மொஹரம் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த மொகரம் பண்டிகை இஸ்லாமிய காலண்டரில் புத்தாண்டாக கருதப்படுகிறது. சந்திரன் தென்படுவதை வைத்து இந்த மொஹரம் பண்டிகை தீர்மானிக்கப்படுகிறது.

அதனால் ஒவ்வொரு நாடுகளிலும் இந்த மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுவது மாறுபடும்.இந்த பண்டிகை முன்னிட்டு குவைத் நாட்டில் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

holiday,moharram festival ,விடுமுறை ,மொஹரம் பண்டிகை

அதே போன்று சவுதி அரேபியாவிலும் வருகிற ஜூலை 21 ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ஜூலை 19ஆம் தேதி (புதன்கிழமை) இஸ்லாமிய புத்தாண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி நாளை மொகரம் பண்டிகை என உறுதி செய்யப்பட்டாலும் வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும் என் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (வருகிற ஜூலை.21) முதல் ஞாயிற்றுக்கிழமை (வருகிற ஜூலை 23) வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :