Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு தினத்தையொட்டி பிரமாண்ட மணல் சிற்பம்..

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு தினத்தையொட்டி பிரமாண்ட மணல் சிற்பம்..

By: Monisha Mon, 18 July 2022 8:08:01 PM

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு தினத்தையொட்டி பிரமாண்ட மணல் சிற்பம்..

சென்னை: தமிழ்நாடு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிரமாண்ட மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. மணல் சிற்பத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் வரையப்பட்டுள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் இந்த மணல் சிற்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்ட மணல் சிற்பத்தை அமைத்து உள்ளார். 50 டன் மண், 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர், மூலம் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.இந்த மணல் சிற்பத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் வரையப்பட்டுள்ளது. அருகில் தமிழ்நாடு மாநிலம் வரைபடமும் உருவாக்கப்பட்டுள்ளது.

sand,sculpture,marina,beach ,சென்னை, மெரினா ,கடற்கரை,
 தமிழ்நாடு,

தமிழ்நாடு நாள் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் இந்த மணல் சிற்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை இன்று காலை அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர். மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கை பாராட்டி அமைச்சர் துரை முருகன் சால்வை அணிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த மணல் சிற்பம் கண்காட்சி ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இதனை பொது மக்கள் நேரில் சென்று பார்வையிடலாம்.அருகில் நின்று செல்பி போட்டோக்கள் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|