Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஒரு கிலோ மிளகாய் வற்றல் நேற்று ரூ.320-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஒரு கிலோ மிளகாய் வற்றல் நேற்று ரூ.320-க்கு விற்பனை

By: vaithegi Mon, 29 Aug 2022 08:03:45 AM

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஒரு கிலோ மிளகாய் வற்றல் நேற்று ரூ.320-க்கு விற்பனை

சென்னை : சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஒரு கிலோ மிளகாய் வற்றல் நேற்று ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து மிளகாய் வற்றல் விலை உயர்வு பற்றி கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:- கடந்த மாதம் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மிளகாய் வற்றல் தற்போது ரூ.140 விலை உயர்ந்து ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சுமார் 78 சதவீத விலை ஏற்றம் ஆகும்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திராவின் குண்டூர் மற்றும் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மிளகாய் வற்றல் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஆந்திராவின் குண்டூர் பகுதியில் மிளகாய் வற்றல் முதல் விளைச்சல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

chilli harvest,koyambedu,chennai ,மிளகாய் வற்றல் ,சென்னை கோயம்பேடு

எனவே இதனால், சென்னை கோயம்பேட்டுக்கு மிளகாய் வற்றல் வரத்து மிகவும் குறைந்தது. மேலும், அரபு நாடுகள், இலங்கை ஆகிய நாடுகளுக்கு பெருமளவில் மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறைவான விளைச்சல் நேரத்தில் இவ்வாறு மிளகாய் வற்றலின் தேவை உயர்ந்ததால் அதன் விலை உயர்ந்துள்ளது. பொதுவாகவே மழைக்காலத்தையொட்டி மிளகாய் வற்றல் விலை ரூ.200 வரை உயரும் . ஆனால் இந்த ஆண்டு மிளகாய் வற்றல் விலை மிகவும் கூடியுள்ளது.

இதனை தெடர்ந்து உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் தற்போது ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாமாயில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது என அவர் கூறினார்.

Tags :