Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிக எண்ணிக்கையில் விளம்பரங்கள்... யூடியூப் நிறுவனம் விளக்கம்

அதிக எண்ணிக்கையில் விளம்பரங்கள்... யூடியூப் நிறுவனம் விளக்கம்

By: Nagaraj Tue, 20 Sept 2022 08:33:28 AM

அதிக எண்ணிக்கையில் விளம்பரங்கள்... யூடியூப் நிறுவனம் விளக்கம்

நியூயார்க்: யூடியூப் நிறுவனம் விளக்கம்... வீடியோ பார்க்கும்போது தவிர்க்க முடியாத வகையில் (unskippable ads) அதிக எண்ணிக்கையிலான விளம்பரங்கள் வருவதற்கு யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


கூகுளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் யூடியூப் பயன்படுத்துகின்றனர். யூடியூப் மூலம் தகவல்களை வீடியோக்களாக பயனர்கள் பெறுகின்றனர்.


பொதுவாக யூடியூப்பில் வீடியோக்களின் ஆரம்பத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். வீடியோ உரிமையாளர்களின் அனுமதியுடன் இடையிடையேயும் விளம்பரங்கள் திரையிடப்படும். அப்போதுகூட நீண்ட விளம்பரங்களை 5 விநாடிகளுக்கு பிறகு தவிர்த்துவிடும் வகையில் விளம்பரங்கள் இருந்தன.

ஆனால், யூடியூபில் சமீபகாலமாக நீண்ட நேரம் ஒளிபரப்பாகும் அனைத்து வீடியோக்களின் இடையிலும் விளம்பரங்கள் திரையிடப்படுகின்றன. இது தொடர்பாக பயனர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, யூடியூப் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

youtube,description,users,ads,videos ,யூடியூப், விளக்கம், பயனர்கள், விளம்பரங்கள், வீடியோக்கள்

சோதனை அடிப்படையில் வீடியோக்களின் இடையிடையே விளம்பரங்கள் திரையிடப்படுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளம்பரங்களின் நீளம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் பயனர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிறகு படிப்படியாக விளம்பரங்கள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக தவிர்க்க முடியாத வகையிலான விளம்பரங்கள் அதிகரிக்கப்பட்டன. தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது.


பயனர்களின் வீடியோ பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் யூடியூப் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று பல புதிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களை பயனர்களுடன் இணைக்கவும் யூடியூப் முயன்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|