Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துப்பாக்கிச்சூடு நாளை ஒட்டி தூத்துக்குடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி

துப்பாக்கிச்சூடு நாளை ஒட்டி தூத்துக்குடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி

By: Nagaraj Mon, 22 May 2023 6:05:20 PM

துப்பாக்கிச்சூடு நாளை ஒட்டி தூத்துக்குடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி

தூத்துக்குடி: ஏராளமான போலீசார் பாதுகாப்பு... தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த நாளையொட்டி, முத்து நகா் கடற்கரை பூங்கா முன் நேற்று ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் 5ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, போலீஸாா் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய தினம் திங்கள்கிழமை (மே 22) வருகிறது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட தரப்பினா், முத்துநகா் கடற்கரையில் அஞ்சலி செலுத்த நேற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஏற்கெனவே, இத்தகைய நிகழ்ச்சிக்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி யாரும் கடற்கரையில் குவியக்கூடாது என்பதற்காக, முத்துநகா் கடற்கரை பூங்கா காவல் துறையினரால் பூட்டப்பட்டு, பொதுமக்கள் பூங்கா உள்ளே செல்ல தடைவிதிக்கப்பட்டது.

police,security,disappointment,thoothukudi,maintenance work ,
போலீஸ், பாதுகாப்பு, ஏமாற்றம், தூத்துக்குடி, பராமரிப்பு பணி

மேலும், கடற்கரை பூங்காவைச் சுற்றிலும் நகர டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். காலை 9 மணி முதல் முத்துநகா் கடற்கரை பூங்கா அடைக்கப்பட்டு, பராமரிப்பு பணி காரணமாக கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என எழுதப்பட்டிருந்தது.

இதனால், பூங்காவுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மேலும், எம்ஜிஆா் பூங்கா, விவிடி சிக்னல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags :
|