Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வருக்கு நடிகர் மோகன்லால் எழுதிய கடிதம் வைரலாகிறது

முதல்வருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வருக்கு நடிகர் மோகன்லால் எழுதிய கடிதம் வைரலாகிறது

By: Nagaraj Tue, 14 Mar 2023 11:11:44 PM

முதல்வருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வருக்கு நடிகர் மோகன்லால் எழுதிய கடிதம் வைரலாகிறது

திருவனந்தபுரம்: குப்பைகளால் கேரளா பாதிக்கப்படும் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வருக்கு நடிகர் மோகன்லால் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரம்மபுரத்தில், 110 ஏக்கரில் வரும் குப்பை கிடங்கில் கடந்த 2-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து கொச்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பேசுபொருளாக மாறியது. இதனிடையே மலையாள நடிகர் மோகன்லால் 6 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

due,major,malayalam,mohanlal , காட்சி, கொச்சி, தீ, விபத்து

அந்த கடிதத்தில், கேரள முதல்-அமைச்சர் படிக்க வேண்டும் என்ற தலைப்பில் கேரளா எதிர்கொள்ளும் குப்பை பிரச்சினை குறித்து மோகன்லால் விவரித்துள்ளார். கேரளாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரவாதி யார் என்றால், அது குப்பையாக தான் இருக்கும் என்று அந்த கடிதத்தில் மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

பிரம்மபுரம் குப்பை கிடங்கு தீ விபத்து தொடர்ந்து, மோகன்லாலின் இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி வருகிறது.

Tags :
|
|