Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸில் தாழ்வாக பறக்க உள்ள விமானம்... மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவிப்பு

பிரான்ஸில் தாழ்வாக பறக்க உள்ள விமானம்... மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவிப்பு

By: Nagaraj Thu, 13 Oct 2022 09:40:48 AM

பிரான்ஸில் தாழ்வாக பறக்க உள்ள விமானம்... மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவிப்பு

பிரான்ஸ்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு... அடுத்த சில வாரங்களில் பிரான்ஸின் பல பகுதிகளில் ஒரு விமானம் மிகவும் தாழ்வாக பறக்க உள்ளதாகவும் மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய அறிவியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸின் வடபகுதியிலுள்ள பல நகரங்களின் மேல் மிகவும் தாழ்வாக விமானம் பறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, நகரங்களுக்கு மேலே உள்ள வானங்களில் வாயு வெளியேற்றத்தை அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

50 அறிவியல் விஞ்ஞானிகள் கொண்ட குழுக்களுடன் இந்த விமானத்தில் பயணிக்கவுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு விமானம் வெறும் 100 முதல் 300 மீட்டர் உயரத்தில் பறக்கும். இந்த அளவை ஒப்பிடுகையில், பெரும்பாலான வணிக ஜெட் விமானங்கள் பொதுவாக முழு உயரத்தில் 10,000 முதல் 12,000 மீட்டர் உயரம் வரை பறக்கின்றன. ஆய்வில் ஈடுபடும் மற்ற குழுக்கள் 12 வெவ்வேறு ஆய்வகங்களில் இருந்து வருகின்றன.

researches,people,fear not,low-flying,aircraft ,ஆராய்ச்சிகள், மக்கள், அச்சப்பட வேண்டாம், தாழ்வாக பறக்கும், விமானம்

பிரான்ஸில் உள்ள விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையத்தின் உறுப்பினர்களும் இதில் ஈடுபடவுள்ளனர். நகர்ப்புற உமிழ்வுகள் மற்றும் மீத்தேன் ஆலைகளில் இருந்து உமிழ்வுகள் தொடர்பில் ஆராய தாம் ஆர்வமாக இருப்பதாக விஞ்ஞானிகள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சி விமானம் காற்றை பகுப்பாய்வு செய்ய மிகவும் தாழ்வாக பறக்கும். இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஆராய்ச்சி பலூன்களும் அந்த பகுதியில் பறக்கவிடப்படும் என்பதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் முடிந்த அளவு இந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|