Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

By: vaithegi Sun, 04 June 2023 11:19:22 AM

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

இந்தியா: தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதாவது, வருகிற ஜூன் 7-ம் தேதிக்குள் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனை அடுத்து ஜூன் 5 முதல் ஜூன் 7 வரை தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இச்சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகலாம்.

low pressure area,meteorological centre ,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ,வானிலை ஆய்வு மையம்


அதிலும் குறிப்பாக, அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மும்பை மற்றும் கொங்கன் பகுதி உள்ளிட்ட மகாராஷ்டிராவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

இதன் இடையில், அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” என பெயர் வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :