Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது ..வானிலை மையம் தகவல்

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது ..வானிலை மையம் தகவல்

By: vaithegi Wed, 18 Oct 2023 09:54:22 AM

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது  ..வானிலை மையம் தகவல்

சென்னை: தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

அதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 23ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

meteorological center,arabian sea ,வானிலை மையம் ,அரபிக் கடல்


இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதனை அடுத்து வருகிற 21ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

Tags :