Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக் கடலில் இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

By: vaithegi Mon, 08 May 2023 11:15:30 AM

வங்கக் கடலில் இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்தியா: வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதை அடுத்து ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு ... வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது.

இதையடுத்து இது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மாறியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதனை அடுத்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

low pressure area,heavy rain ,காற்றழுத்த தாழ்வு பகுதி ,கன மழை

எனவே இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை முதல் 11.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் காற்றழுத்த தாழ்வுக்கு காரணமாக மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :