Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது ... வானிலை மையம் தெரிவிப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது ... வானிலை மையம் தெரிவிப்பு

By: vaithegi Sun, 07 May 2023 1:20:27 PM

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது  ...  வானிலை மையம் தெரிவிப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது.

இதனை அடுத்து வருகிற 9- ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

weather station,low pressure area ,வானிலை மையம்,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.


Tags :