Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு

By: vaithegi Wed, 19 Oct 2022 12:44:55 PM

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு

இந்தியா: அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு .... இந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை விட மழையின் அளவு அதிகமாக இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்தாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

low pressure area,india ,காற்றழுத்த தாழ்வு பகுதி ,இந்தியா

தற்போது அந்தமான் மற்றும் அதேச ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் 22ம் தேதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். பிறகு அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக உருமாறி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :