Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் வருகிற 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் வருகிற 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

By: vaithegi Mon, 07 Nov 2022 2:56:43 PM

வங்கக்கடலில் வருகிற 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து இந்த நிலையில் தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

low pressure,meteorological centre ,குறைந்த காற்றழுத்த தாழ்வு ,வானிலை ஆய்வு மையம்

மேலும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 9ம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

எனவே அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும். 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசை நோக்கி நகரக்கூடும். இந்தனால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :