Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்த தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

By: vaithegi Wed, 30 Nov 2022 2:55:51 PM

இந்த தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோன்று காற்றழுத்தாக பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

bay of bengal,low pressure area ,வங்கக்கடல் , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இதனை அடுத்து படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாக்க பகுதி டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் புயலாக மாறக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைபெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது

Tags :