Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

By: vaithegi Tue, 07 Nov 2023 09:27:31 AM

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

low pressure area,middle east arabian sea , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மத்திய கிழக்கு அரபிக் கடல்

இந்த நிலையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேலும் ராயலசீமா மற்றும் கடலோர கர்நாடகா பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் நவ.9 வரை கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Tags :