Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது

By: vaithegi Mon, 08 Aug 2022 12:28:52 PM

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது

புதுடெல்லி: ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதியை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

deep depression,india meteorological department ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு , இந்திய வானிலை ஆய்வு மையம்

இதை அடுத்து சத்தீஸ்கர், கோவா, மேற்கு மத்தியப்பிரதேசம், கிழக்கு மத்தியப்பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைதொடர்ந்து தற்போது உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக எந்த வகையிலும் தமிழகத்திற்கு கனமழை முதல் அதீத கனமழையோ அல்லது ஏதேனும் ஆபத்தோ இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Tags :