Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது... 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது... 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

By: Nagaraj Wed, 05 Oct 2022 9:18:07 PM

காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது... 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மத்திய மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நீலகிரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain,report,weather,observatory,fishermen,strong winds ,
கனமழை, அறிக்கை, வானிலை, ஆய்வு மையம், மீனவர்கள், பலத்த காற்று

நாளை.,(அக்., 06) : மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்பகுதிகளுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|