Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

By: vaithegi Mon, 24 July 2023 11:45:21 AM

வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்தியா: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சிலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் அரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

low pressure area,bay of bengal ,காற்றழுத்த தாழ்வு பகுதி ,வங்கக் கடல்

இதனை அடுத்து வருகிற 27 -ஆம் முதல் 29-ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :