Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேகாலயாவில் இன்று காலையில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேகாலயாவில் இன்று காலையில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

By: vaithegi Thu, 16 Feb 2023 6:14:44 PM

மேகாலயாவில் இன்று காலையில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேகாலயா: 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ... மேகாலயாவில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காலை 9.26 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் கிழக்கு காசி மலையில் 46 கி.மீ ஆழத்தில் இருந்தது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

earthquake,meghalaya ,நிலநடுக்கம் ,மேகாலயா

மேலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஷில்லாங், கிழக்கு காசி மலை மாவட்டத்தின் தலைமையகம், ரி-போய் மற்றும் அசாமின் கம்ரூப் மாவட்டத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் வடகிழக்கில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் முறையே 4 மற்றும் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மத்திய அசாமின் ஹோஜாய் அருகே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :