Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்வாரிய துறையில் 55,295 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை

மின்வாரிய துறையில் 55,295 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை

By: vaithegi Wed, 25 Oct 2023 3:39:38 PM

மின்வாரிய துறையில் 55,295 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை


சென்னை: வலுக்கும் கோரிக்கை ... தமிழக மின்வாரியத் துறையில் தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் ஆகிய பதவிகளில் 1.45 லட்சம் காலிபணியிடங்கள் இருந்தனஇதையடுத்து . இதில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே 88,774 பணியிடம் நிரப்பப்பட்ட நிலையில் தற்போது 55, 295 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மின்வாரியத்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும், 55000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மின் பழுதுகளை சரிபார்ப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை வைத்துள்ளனர்.

main demand from tamil nadu government. jobs ,தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை.பணியிடங்கள்


இதனால், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மின்வாரிய துறைக்கு கோரிக்கையினை வைத்துள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக மின்வாரியத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல் நிரந்தர அடிப்படையில் ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், இதில் முதற்கட்டமாக 5000 ஊழியர்களையாவது நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும் என்றும்மின்வாரியத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Tags :