Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இத்தாலியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை என 3 நோய் பாதிப்பு .. மருத்துவர்கள் அதிர்ச்சி

இத்தாலியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை என 3 நோய் பாதிப்பு .. மருத்துவர்கள் அதிர்ச்சி

By: vaithegi Thu, 25 Aug 2022 9:39:10 PM

இத்தாலியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை என 3 நோய் பாதிப்பு ..   மருத்துவர்கள்  அதிர்ச்சி

இத்தாலி: இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கு கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை என்று 3 நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டு இருப்பது மருத்துவர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 5 நாள் பயணமாக ஸ்பெயின் சென்று வந்த 36 வயது நபருக்கு 9 நாட்கள் கழித்து தொண்டை வலி, சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் அவர் போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு ஒருமுறை கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

italy,corona,hiv,monkey measles ,இத்தாலி,கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை

இந்நிலையில், சிறிய, வலி நிறைந்த கொப்புளங்கள் அவரது உடலில் தென்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அந்த நபருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வீக்கம் இருப்பதையும் கண்டனர். பரிசோதனை முடிவுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அதேபோன்று, குரங்கு அம்மை, எச்.ஐ.வி பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்தது

Tags :
|
|
|