மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்ப முயன்றவர் விமான நிலையத்தில் கைது
By: Nagaraj Sun, 26 Nov 2023 10:34:05 PM
சென்னை: கைது செய்யப்பட்டார்... முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை குறிவைத்து பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளிநாடு தப்பிச் செல்லவிருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோட்டில் யுனிக் எக்ஸ்போர்ட் மற்றும் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் என்ற பெயரில், முதலீடு செய்யும் பணத்துக்கு பன்மடங்கு வட்டி மாதத்தவணையாகக் கொடுக்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்று அறிவித்து, பல்வேறு மாவட்டங்களில் பணம் வசூல் செய்த கும்பல், முதல் இரண்டு மாதங்கள் முறையாக பணம் கொடுத்ததாகவும் அதன் பின்னர் பணத்தை வழங்காமல் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான நவீன்குமாரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்த போலீசார் ஈரோடு அழைத்துச் சென்றனர்.