Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 26-ம் தேதி திமுக‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌

வரும் 26-ம் தேதி திமுக‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌

By: vaithegi Wed, 22 Nov 2023 09:54:26 AM

வரும் 26-ம் தேதி திமுக‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌

சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை திமுக‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ தி.மு.க. மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌ நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவிப்பு .... திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

“திமுக‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ தி.மு.க. மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌ வருகிற 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில்‌, சென்னை, தியாகராயர்‌ நகர்‌, “ஓட்டல்‌ அகார்டில்‌” நடைபெறும்‌.

district club secretaries meeting,dmk president m.k.stalin , மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌, திமுக‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌

அதுபோது மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்‌.

இதையடுத்து இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞர்‌ அணி 2-வது மாநில மாநாடு மற்றும்‌ வாக்குச்‌ சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின்‌ பணிகள்‌ குறித்து விவாதிக்கப்படவுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :