Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற மார்ச் 22 தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வருகிற மார்ச் 22 தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

By: vaithegi Tue, 14 Mar 2023 12:08:57 PM

வருகிற மார்ச் 22 தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மார்ச் 22 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 22 -ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் மார்ச் 21 மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

secretaries,dmk,m.k.stalin ,செயலாளர்கள் ,திமுக ,மு.க.ஸ்டாலின்

மார்ச் 22-இல் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

வருகிற ஜூன் மாதம் கருணாநிதியின் 99 -வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நூற்றாண்டு தொடக்க விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கின்றன.

Tags :
|