Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதலமைச்சர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

இன்று முதலமைச்சர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

By: vaithegi Sat, 16 Sept 2023 1:02:16 PM

இன்று முதலமைச்சர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் 18 லிருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இச்சிறப்பு கூட்டத்தில் 'ஒரே நாடு ஒரு தேர்தல்', இந்தியா என்ற பெயர் மாற்றம் தீர்மானம் உள்ளிட்டவை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.

dmk mps meeting,chief minister , திமுக எம்.பி.க்கள் கூட்டம் ,முதலமைச்சர்

இதையடுத்து இச்சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு உள்ள நிலையில், சிறப்புக் கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கவுள்ளது.

Tags :