Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்

By: Karunakaran Thu, 30 July 2020 11:38:56 AM

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கொரோனா காலகட்டத்திலும் கூட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக, மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம் காரணமாக பல மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 3.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

mild earthquake,punjab,shook,earthquake ,லேசான பூகம்பம், பஞ்சாப், அதிர்வு, பூகம்பம்

பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் டரன் பகுதியில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. வடகிழக்கு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புடன், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.




Tags :
|
|