Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளவில் குரங்கு அம்மை பாதிப்படைந்தவர் முழுமையாக குணம் அடைந்தார்

கேரளவில் குரங்கு அம்மை பாதிப்படைந்தவர் முழுமையாக குணம் அடைந்தார்

By: vaithegi Sat, 30 July 2022 4:17:43 PM

கேரளவில் குரங்கு அம்மை பாதிப்படைந்தவர் முழுமையாக குணம் அடைந்தார்

திருவனந்தபுரம்: இந்தியாவில் கடந்த 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது .

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 35 வயதான குரங்கு அம்மை பாதித்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

monkey measles,thiruvananthapuram,gunam ,குரங்கு அம்மை,திருவனந்தபுரம் ,குணம்

இந்நிலையில்,நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து 72 மணி நேர இடைவெளியில் இருமுறை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டுமே நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :