அமெரிக்காவில் பாடசாலைக்குள் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச்சூடு
By: Nagaraj Fri, 30 Sept 2022 08:31:23 AM
அமெரிக்கா: மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஆக்லாந்தில் இடை நின்ற மாணவர்களுக்கு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பாடசாலைக்குள் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் திடீரென்று நுழைந்து சரமாரியாக சுட்டுள்ளார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி
சூடு நடத்திய வாலிபர் தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் 6
மாணவர்கள் காயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்டு மருத்துவமனையில்
சேர்த்தனர்.
இதில் 3 பேரின் நிலைமை
கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும்
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.