Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய மாற்றம்

அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய மாற்றம்

By: vaithegi Thu, 27 July 2023 1:01:56 PM

அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய மாற்றம்

சென்னை: சீட்களின் கவர்கள் மாற்றப்பட்டுள்ளது .. நீண்ட தூர பயணங்களுக்கு பேருந்தை தேர்ந்தெடுக்கும் போது தனியாரை காட்டிலும் அரசு பேருந்துகளில் கட்டணம் மிக குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் அரசு விரைவு பேருந்துகளில் தான் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிகளை கவரும் வகையில் அண்மையில் 50 சதவீத கட்டண சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து பேருந்து இருக்கைகள் சுத்தமாக இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

government express bus,passengers ,அரசு விரைவு பேருந்து,பயணிகள்


இதையடுத்து இது தொடர்பாக ஆய்வு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளது. அதாவது பராமரிக்க ஏதுவாக சீட்களில் துணி கவர்களுக்கு பதிலாக ரெக்சின் கவர்களை மாற்ற அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

முதல் கட்டமாக குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே கவர்கள் மாற்றப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பேருந்துகளில் கவர்கள் மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :