Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தைகளை தாக்கும் புதிய நோய்த்தொற்று; அமெரிக்கா மக்கள் அதிர்ச்சி

குழந்தைகளை தாக்கும் புதிய நோய்த்தொற்று; அமெரிக்கா மக்கள் அதிர்ச்சி

By: Nagaraj Sun, 10 May 2020 5:48:40 PM

குழந்தைகளை தாக்கும் புதிய நோய்த்தொற்று; அமெரிக்கா மக்கள் அதிர்ச்சி

ஒருபக்கம் கொரோனா அச்சுறுத்தல் என்றால் மறுபக்கம்
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு புதுவிதமான நோய்த்தொற்று பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிக அளவில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும்நோக்கில் அமெரிக்க அரசு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, ஆனாலும், அதிக மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றொரு நோய்த்தொற்று. அமெரிக்காவில் அலர்ஜி ஏற்பட்டு கவாசாகி நோயைப் போன்ற அறிகுறியுடன் பல குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


new epidemics,children,trauma,america,people ,புதிய நோய் தொற்று, குழந்தைகள், அதிர்ச்சி, அமெரிக்கா, மக்கள்

மிகவும் அரியவகை நோயாக இந்த நோய் கருதப்படும் நிலையில், அமெரிக்காவில் ஒரு ஆண்டிற்கு சுமார் 3 ஆயிரம் குழந்தைகள் கவாசாகி நோய்க்கு உள்ளாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூயார்க்கில் 2 முதல் 15 வயதுக்குட்பட்ட 15 குழந்தைகள் கவாசாகி நோயின் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது,

அந்த 3 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் கொரோனா பாதிப்பால்தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என்று கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தில் இருந்து அமெரிக்கர்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது குழந்தைகளை தாக்கும் புதிய நோய்த்தொற்று மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|